ETV Bharat / sitara

நடிகர் அனுபம் கெரின் குடும்பத்தினருக்குக் கரோனா!

நடிகர் அனுபம் கெரின் தாயார் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அனுபம் கெரின்
அனுபம் கெரின்
author img

By

Published : Jul 12, 2020, 2:06 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தொற்றால், தற்போது அரசியல் கட்சிப் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அனுபம் கெர் குடும்பத்தினருக்கு, தற்போது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனுபம் கெர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்னுடைய அம்மாவுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்னுடைய சகோதரர், அண்ணி, அவர்களது மகன் ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து நானும் பரிசோதனை செய்தேன். பரிசோதனை முடிவில் எனக்குக் கரோனா தொற்று இல்லை என்று முடிவு வெளியானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.