மார்வெல் யுனிவர்ஸுடன் இணைவது குறித்த ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த ஏஞ்சலினா, காமிக்-கான் மேடையில் மார்வெல் யுனிவர்ஸுடன் இணைவதற்கான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். 44 வயதான ஏஞ்சலினா, 'தி எடர்னல்ஸ்' திரைப்படத்தில் காமிக் கதாபாத்திரமான தேனாவாக நடிக்கவிருப்பதாகவும், இப்படம் தனக்கு நம்பமுடியாத பல அனுபவங்களை அளித்ததாகவும் கூறுகிறார்.
மேலும், இப்படத்திற்காக தான் 10 மடங்கு கடினமாக உழைக்கப் போவதாகவும், இது மார்வெல் யுனிவர்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் கடமையாக உணர்கிறேன் என்றும், உங்களின் தேவை என்னவென்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் ரசிகர்களின் மனநிறைவிற்காக மிகவும் கடினமாக உழைக்கப் போகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏஞ்சலினா ஜோலி தவிர, 'தி எடர்னல்ஸ்' திரைப்படத்தில் சல்மா ஹயக், ரிச்சர்ட் மேடன், பிரையன் டைரி ஹென்றி, குமெயில் நாஞ்சியானி, லாரன் ரிட்லோஃப், டான் லீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.