மாறுபட்ட கதைக்களம், கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துவருபவர் நடிகை ஆண்ட்ரியா. 'அவள்', 'தரமணி', போன்ற படங்களில் இவரின் நடிப்பு அனைத்து தரப்பினராலும் புகழ்ந்து பேசப்பட்டது. கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை தேர்வு செய்து ரசிகர்களை மிரட்டியிருந்தார் ஆண்ட்ரியா.
தற்போது 'மாளிகை' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் ஆண்ட்ரியா, திருப்பூர் மாவட்டம் ராயப்பண்டாரம் வீதியில் தனியார் கண் மருத்துவமனை திறப்புவிழாவில் கலந்து கொண்டு அதனைத் திறந்துவைத்தார்.
அப்போது பேசிய அவர், "கண்தானம் செய்வது மிகவும் அவசியம். கண்தானம் செய்வது நாம் செய்யும் சிறந்த செயல். இதனால் கண்பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை கிடைக்க வழிகிடைக்கும்.
நடிகை ஐஸ்வர்யா ராயை பார்த்து கண்தானம் செய்ய முன்வந்தேன். என்னைப்போல அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும்" என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.