ETV Bharat / sitara

பன்முக கலைஞர் ஒய்ஜி மகேந்திரன்!

தமிழ் சினிமா கண்டெடுத்த பன்முக கலைஞர்களுள் ஒருவரான ஒய்ஜி மகேந்திரன் இன்று தனது 72ஆவது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடுகிறார்.

YG Mahendran
YG Mahendran
author img

By

Published : Jan 9, 2022, 7:45 AM IST

ஹைதராபாத் : ஒய்ஜி பார்த்தசாரதி, ராஜலட்சுமி தம்பதியருக்கு மகனாக ஜன.9ஆம் தேதி 1950 ஆண்டு சென்னையில் ஒய்ஜி மகேந்திரன் பிறந்தார்.

பன்முக கலைஞரான இவர் நாடக துறையில் இருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கினார். இவரது தாய்-தந்தையரும் நாடக கம்பெனி பின்புலம் கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் தொடங்கிய நாடக நிறுவனம் சென்னையில் பிரசித்தம்.

நாடகக் கலைஞர்

ஆகையால் இயல்பிலேயே ஒய்ஜி மகேந்திரன் நாடக நடிப்பில் சிறந்து விளங்கினார். திரைப்படங்களை பொறுத்தமட்டில் ஒய்ஜி மகேந்திரனின் நகைக்சுவை பெரிதும் பேசப்பட்டது. ரஜினி, கமல் ஆகியோருடன் இணைந்து இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இருவருடனும் இன்றளவும் நட்பு பாராட்டுவதில் ஒய்ஜி மகேந்திரனுக்கு நிகர் அவரே.

ரஜினி, கமலுடன் இணைந்து நடித்த படங்களில் போக்கிரி ராஜா, பாயும் புலி, ஸ்ரீ ராகவேந்திரா, ஆபூர்வ ராகங்கள், நீயா, குரு, சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றிப் பெற்ற படங்கள் ஆகும். இவர்கள் தவிர அந்தக்கால முன்னணி நடிகர்களாக சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் உள்ளிட்டோர் படங்களிலும் முக்கிய நகைக்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரஜினி, கமல் மாநாடு

தற்போதைய தலைமுறை நடிகர்கள் படத்திலும் நடித்துவருகிறார். அந்த வகையில் விஜய்யுடன் பைரவா மற்றும் தலைவா, சிம்புவுடன் மாநாடு உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் மாநாடு படத்தில் ஒய்ஜி மகேந்திரனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

ஒய்ஜி மகேந்திரனின் தமிழ் சினிமா பயணம் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நவக்கிரகம் படத்தின் மூலம் தொடங்கியது. பன்முக கலைஞரான ஒய்ஜி மகேந்திரன் கலாசாரம், பண்பாடுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் ஆவார்.

வெளிப்படை பேச்சு

வைணவ பாரம்பரியத்தை சேர்ந்த இவர் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்துகளை பகிர்ந்துள்ளார். மேலும் தனது கருத்தையும் மறைக்காமல் வெளிப்டையாக பேசும் குணம் கொண்டவர்.

சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜெய் பீம் படம் குறித்து ஒய்ஜி மகேந்திரன் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : HBD நிதின் சத்யா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.