இங்கிலாந்தைச் சேர்ந்த மாடலான எமி ஜாக்சன், தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடித்த அவர் விக்ரமுடன் தாண்டவம், ஐ, விஜய்யுடன் தெறி போன்ற படங்களிலும் நடித்தார்.
கடைசியாக அவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தில் ரஜினியுடன் இணைந்து பெண் ரோபோவாக நடித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோவை காதலிப்பதாக எமி ஜாக்சன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த எமிக்கு காதலனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து அவ்வபோது தனது கர்ப்பகால தருணங்களை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வந்தார் எமி. பின்பு கடந்த மாதம் தனக்கு ஆண் குழந்தை பிறக்கப்போவதாக வித்தியசமான வீடியோ மூலம் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தனது குழந்தைக்கு தாயப்பால் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் எமி ஜாக்சன். அந்த புகைப்படம் வைரலான நிலையில், எமி ஜாக்சன் தனது குழந்தையின் புதுப் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த படத்தில் எமி ஜாக்சனின் ஆண் குழந்தை வெள்ளை உடையில் சாதுவாக தொட்டிலில் படுத்து உறங்குகிறது.
எமி ஜாக்சனின் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை ஷேர் செய்யத் தொடங்கிவிட்டனர். குழந்தை வயிற்றிலிருந்தபோதே பல்வேறு படங்களை பதிவிட்ட எமிக்கு இனி சொல்லவா வேண்டும். இனி தினந்தோறும் எமியின் இன்ஸ்டாவில் குழந்தை மயம் தான்.