ETV Bharat / sitara

அடித்தது செம லக்... தடம் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த அம்ரிதா ஐயர்! - தடம் தெலுங்கு ரீமேக்

தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை அம்ரிதா ஐயர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தடம் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த அம்ரிதா ஐயர்!

author img

By

Published : Jan 31, 2020, 3:42 PM IST

மகிழ் திருமேனி இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் தடம். அருண் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கோலிவுட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழைத் தொடர்ந்து தடம் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகிவருகிறது. 'ரெட்' என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ராம் பொத்தினேனி நடிக்கிறார். கிஷோர் திருமலா இப்படத்தை இயக்குகிறார்.

இந்த நிலையில் ஏற்கனவே இப்படத்தில் நிவேதா தாமஸ், மாளவிகா சர்மா, ஆகியோர் நடித்துவரும் நிலையில், தற்போது இப்படத்தில் நடிகை அம்ரிதா ஐயர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் தமிழில் ஸ்மிருதி வெங்கட் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் அம்ரிதா ஐயர் கால்பந்து வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து அம்ரிதாவுக்கு தற்போது ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க: டாப்சியின் 'தப்பட்' பட ட்ரெய்லர் வெளியீடு!

Intro:Body:

amirtha iyar telugu remake

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.