கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக அமலில் இருக்கும், ஊரடங்கால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தினசரி வேலைபார்க்கும் தொழிலாளர்கள் உண்ண உணவின்றி தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், நடிகை அம்ரிதா ராவ் தனது வீட்டில், வாடகைக்கு குடியிருப்பவர்களிடமிருந்து மார்ச் மாதத்திலிருந்து, ஜூலை மாதம் வரை வாடகை வாங்கவில்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர், "என் வீட்டு குடியிருப்பில் வசிப்பவர்கள், சிலர் தற்காலிக வேலை, ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர ஊதியம் இல்லை. அதிலும் இந்த இரவு நேரத்தில் அவர்களின் சிரமத்தை நான் புரிந்துகொண்டேன். அதனால்தான் அவர்களிடமிருந்து நான் வீட்டு வாடகை வாங்கவில்லை" என்று கூறியுள்ளார்.
நடிகை அம்ரிதா ராவ் கடைசியாக நவாசுதீன் சித்திக் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.