’ராதே ஷ்யாம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் ‘மகாநடி’ பட இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 21ஆவது படமாகும். அறிவியல் பின்னணியில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கவுள்ளார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் இணைந்துள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபாஸ்- அமிதாப்பச்சன் காம்போவில் உருவாகும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
-
Welcoming with a full heart, the pride of a billion Indians. The Amitabh Bachchan. Our journey just got BIG-ger!https://t.co/bmG2GXBODh#NamaskaramBigB @SrBachchan 🙏#Prabhas @deepikapadukone @nagashwin7 @AshwiniDuttCh@SwapnaDuttCh @VyjayanthiFilms
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) October 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Welcoming with a full heart, the pride of a billion Indians. The Amitabh Bachchan. Our journey just got BIG-ger!https://t.co/bmG2GXBODh#NamaskaramBigB @SrBachchan 🙏#Prabhas @deepikapadukone @nagashwin7 @AshwiniDuttCh@SwapnaDuttCh @VyjayanthiFilms
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) October 9, 2020Welcoming with a full heart, the pride of a billion Indians. The Amitabh Bachchan. Our journey just got BIG-ger!https://t.co/bmG2GXBODh#NamaskaramBigB @SrBachchan 🙏#Prabhas @deepikapadukone @nagashwin7 @AshwiniDuttCh@SwapnaDuttCh @VyjayanthiFilms
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) October 9, 2020
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் நடிக்கிறார் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் தலைப்பு, யார் யார் இதில் நடிக்க போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் 'நுங்கம்பாக்கம்'!