ETV Bharat / sitara

குடும்பத்தோட அமலா பால் படத்தை பார்க்கலாம் சென்சாரே சொல்லிட்டாங்க... - அமலா பாலின் படத்திற்கு கிடைத்த சென்சார்

'ஆடை' படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற நடிகை அமலா பால் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள 'அதோ அந்த பறவை போல' படத்தின் தணிக்கைப் பணிகள் முடிந்துள்ளன.

amala paul
author img

By

Published : Nov 6, 2019, 2:45 PM IST

Updated : Nov 6, 2019, 3:28 PM IST

நடிகை அமலா பால் விவாகரத்திற்குப் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான 'ஆடை' திரைப்படம் பெரும் விமர்சனங்களைச் சந்தித்தது. ரத்னகுமார் இயக்கியிருந்த ஆடை திரைப்படத்தில் அமலா பால் மேலாடை இல்லாமல் நடித்திருந்த காரணத்தினால் அப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதன்பின் படம் வெளியான பின்பும் கலவையான விமர்சனத்தையே சந்தித்தது. இதைத் தொடர்ந்து அமலா பால் தற்போது இந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார்.

இதனிடையே புதுமுக இயக்குநர் கே.ஆர். வினோத் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள 'அதோ அந்த பறவை போல' என்ற படத்திலும் நடித்திருந்தார். 2017ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நீண்டநாட்களாக தள்ளிப்போயின. இதனிடையே இத்திரைப்படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவடைந்ததால் படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

amalapaul
அமலா பால் அடுத்த படத்தின் போஸ்டர்

காட்டில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண் எவ்வாறு அங்கிருந்து தப்பித்துவருகிறார் என்பதே இந்தப் படத்தின் கதை. லிப்ரா புரெடக்ஷன் தயாரித்துள்ள 'அதோ அந்த பறவை போல' திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

Actress Amala Paul was last seen on screen in the movie Aadai directed by Rathna Kumar, and the movie was sensational and controversial due to Amala Paul's bold act. There were even protests against the movie, and after release Aadai received mixed response.

Now one of the long delayed movies of Amala Paul is ready for release. Adho Andha Paravai Pola, directed by debutant KR Vinoth and produced by Century International films has been censored U, and the movie will be released by Libra Productions soon.

Adha Andha Paravai Pola will have Amala Paul playing a woman who gets stuck in a forest and on how she escapes from the dangers.

Conclusion:
Last Updated : Nov 6, 2019, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.