ETV Bharat / sitara

இதயத்தை தொட்ட மாற்றுத்திறனாளிகளின் காதல் டிக்-டாக்! அல்லு அர்ஜுன் ஷேரிங் - அல்லு அர்ஜுன் இதயத்தை தொட்ட புட்ட பொம்மா விடியோ

'புட்ட பொம்மா' பாடலின் பல்வேறு வெர்ஷன்களை காட்டிலும் இதயத்தை தொட்டதாக கூறி, மாற்றுத்திறனாளிகள் இருவர் காதல் செய்து அந்தப் பாடலுக்கு நடனமாடும் டிக்-டாக் விடியோவை பகிர்ந்துள்ளார் அல்லு அர்ஜுன்.

Allu arjun shares Butta Bomma Video which inspires by all
Telugu actor Allu Arjun
author img

By

Published : Feb 11, 2020, 2:15 PM IST

ஹைதராபாத்: 'அலா வைகுந்தபுரமுலோ' தெலுங்கு படத்தில் சூப்பர் ஹிட்டான 'புட்ட பொம்மா' பாடலுக்கு மாற்றுத்திறனாளிகள் இருவர் செய்யும் டிக்-டாக் விடியோவை பகிர்ந்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.

ஆந்திரா, தெலுங்கு மாநிலங்களில் பட்டிதொட்டியெங்கும் இந்தப் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதையடுத்து இப்பாடலை வைத்து வித்தியாசமாக நடனமாடி பலரும் டிக்-டாக் விடியோவை வெளியிட்டு வருகின்றனர். இதில் சில விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் லைரலாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டே நடிப்பில் திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான இந்தப் படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து படத்தில் இடம்பெறும் 'புட்ட பொம்மா' பாடலுக்கு இரண்டு மாற்றுத்திறனாளிகள் காதல் பொங்க நடனமாடிய டிக்-டாக் விடியோ நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், 'புட்ட பொம்மா' பாடலை வைத்து வெளியான பல்வேறு விடியோக்களில் இதயத்தை தொட்ட விடியோவாக இது அமைந்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்தப் பாடலும், இசையும் எட்ட முடியாத இடத்தை சென்றடைந்திருப்பது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

பலருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமைந்திருக்கும் இந்த விடியோவை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீ-ட்வீட் செய்துள்ளனர்.

தமன் இசையமைப்பில் 'புட்ட பொம்மா' பாடல் மட்டுமில்லாமல், இந்தப் படத்தில் இடம்பிடித்த ராமுலோ ராமுலா, சாமஜவரகமனா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டில் வெளியான தெலுங்கு படங்களில் முதலாவதாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது அலா வைகுந்தபுரமுலோ. தற்போது வரை 250 கோடி ரூபாய் வசூல் ஈட்டிருப்பதாக கூறப்படும் இந்தப் படம், இந்தி இல்லாமல் பிராந்திய மொழிகளில் அதிகம் வசூலித்த படம் என்று சாதனையும் புரிந்துள்ளது.

Intro:Body:

Allu arjun shares Butta Bomma Video Butta Bomma tik-tok Video Allu arjun shares inspiring video அல்லு அர்ஜுன் இதயத்தை தொட்ட புட்ட பொம்மா விடியோ புட்ட பொம்மா பாடலுக்கு மாற்றுத்திறனாளிகள் டிக்-டாக் 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.