சென்னை: இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான இர்பான் பதான் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.
ஹன்சிகா நடிக்கவிருக்கும் திகில் கலந்த காமெடி படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.
இதைத் தொடர்ந்து தற்போது சுழல் மன்னன் ஹர்பஜன் சிங், சந்தானம் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், மூன்றாவது வீரராக கோலிவுட்டில் களமிறங்கியுள்ளார் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான இர்பான் பதான்.
சீயான் விக்ரம் நடிக்கும் 58ஆவது படத்தில் மிகவும் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவிருப்பதாகப் படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தை டிமாண்டி காலனி பட புகழ் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
கிரிக்கெட் மைதானத்தில் கலக்கியவர்கள் தற்போது கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து தங்களது நடிப்பு அவதாரத்தை வெளிக்காட்டவுள்ளனர்.