ETV Bharat / sitara

'சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' - அக்ஷய் குமார் அதிரடி! - சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்- அக்ஷய் குமார் அதிரடி

நடிகர் அக்ஷய் குமார், தன் மீது பொய்யான தகவல் பரப்பும் நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Akshay kumar
Akshay kumar
author img

By

Published : May 31, 2020, 9:59 PM IST

ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் அக்ஷய் குமார், பலவித நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் அக்ஷய் குமார், தனது தங்கை, அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் தனது வீட்டின் பணிப்பெண் ஆகியோருக்கு டெல்லியில் இருந்து மும்பைக்குச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்ததாக செய்தி வெளியானது.

அதுமட்டுமின்றி 186 பேர் பயணிக்கும் விமானத்தில், அவர்கள் நான்கு பேர் மட்டுமே பயணம் செய்ததாகக் கூறப்பட்டது. இதைக் கேட்ட அக்ஷய் குமாரின் ரசிகர்கள், அவரை கடுமையாக சாடினர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் அக்ஷய் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் சகோதரி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்காக நான் தனி விமானம் முன்பதிவு செய்து கொடுத்ததாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. அவர் ஊரடங்கு அமல்‌‌படுத்தப்பட்ட நாள்முதல் எங்கும் பயணம் செய்யவில்லை. மேலும் அவருக்கு ஒரே ஒரு குழந்தை மட்டுமே உள்ளது. இதுபோன்று போலி செய்திகள் பரப்பும் நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.