அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் அமையவுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில் ‘வலிமை’ படத்தின் ‘வேற மாறி’ எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. விக்னேஷ் சிவன் எழுதிய இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அஜித் ரசிகர்கள் ‘வேற மாறி’ பாடலை கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் பாடல் வெளியாகி ஒரு வாரம் கடந்தும் யூடியூப் மியூசிக்கில் முதலிடத்தில் உள்ளது. 1.5 கோடி பேர் இந்தப் பாடலை யூடியூப்பில் பார்த்திருக்கிறார்கள்; 12 லட்சத்துக்கும் அதிகமானோர் இதை லைக் செய்துள்ளனர். அஜித் ரசிகர்கள் இதனால் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள்.
![வலிமை: யூடியூப் மியூசிக்கில் இன்னும் முதலிடம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12730204_2.jpg)
NaangaVeraMaari என்ற ஹேஷ்டேக்கில் இது தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர். ‘வலிமை’ படத்தின் அடுத்த பாடல், டீஸர் அப்டேட்கள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வசந்தபாலன் படத்தில் இணைந்த தொலைக்காட்சி பிரபலம்!