நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை எடுத்து வருகிறார் ஹெச்.வினோத். இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.
இதில், காவல் துறை அலுவலராக அஜித் நடிக்கிறார். இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராத நிலையில், அவ்வப்போது அஜித்தின் புகைப்படங்கள் வெளிவருகின்றன. தற்போது படக்குழுவினர் வடமாநிலங்களில் முக்கியமான காட்சிகளை எடுத்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து முக்கிய சண்டைக்காட்சிகளை எடுக்க படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு படத்தின் முக்கியமான சண்டைக்காட்சிகள் எடுக்கவுள்ளதாகவும் அதனை முடித்துவிட்டால் இன்னும் ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க...முதலமைச்சர் அமர்ந்தவுடன் குழந்தை அழுததால் விமானம் புறப்பட தாமதம்