நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தனியார் செய்தி ஊடகம் ஒன்றில் அஜித் அரசியலுக்கு வர தயாராக உள்ளதாக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் அளித்த பேட்டி வெளிவந்திருந்தது.
இதற்கு, அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "அஜித் குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று சுரேஷ் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:வலிமையான வசூல் - திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி