ETV Bharat / sitara

‘கடவுளே’ என கோஷமிட்ட ரசிகர்கள் - கடுப்பான அஜித்! - தல

ரசிகர்கள் ‘கடவுளே’ என கோஷமிட்டதால் கடுப்பான அஜித், வேகமாகக் காரில் ஏறி புறப்பட்டுச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Thala ajith new look
author img

By

Published : Oct 7, 2019, 7:47 PM IST

Ajith latest - தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக இயங்கிவரும் அஜித், ரசிகர்கள் சண்டைகளைத் தவிர்ப்பதற்காக ரசிகர் மன்றங்களைக் கலைத்தவர். அதுமட்டுமல்லாமல் தனி மனித வழிபாடு தவறு எனவும், குடும்பத்தை கவனிக்குமாறும் தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கி வருகிறார். ஆனால் ரசிகர்கள் அதை எல்லாம் கேட்பதாகத் தெரியவில்லை. அதற்கு உதாரணமாக சென்னை ஏர்போர்ட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள டாக்டர். கர்ணி சிங் துப்பாக்கி சுடுதல் வெளியில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு அஜித் சென்னை திரும்பினார். தலைக்கு கருப்பு டை அடித்து பழையபடி யூத் லுக்கில் அஜித் விமான நிலையம் வந்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அங்கிருந்து அஜித் கிளம்பும் வேளையில், ரசிகர்கள் சிலர் அவருடன் செல்ஃபி எடுக்க வந்தனர். அஜித்தும் சலிக்காமல் ரசிகர்களுக்காக போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு ரசிகர் ‘கடவுளே’ என கோஷமிட, அதைப் பின்பற்றி மற்ற ரசிகர்களும் ‘கடவுளே’ என கோஷமிட்டனர். இதைக் கண்ட அஜித்தின் முகம் மாறியது, உடனடியாக ரசிகர்களை விலக்கிவிட்டு காரில் ஏறி புறப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு போலீஸ் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இதற்காக உடம்பை குறைத்து யூத் லுக்கில் அஜித் தோன்றவிருக்கிறாராம்...

இதையும் வாசிங்க: பாலகிருஷ்ணாவின் தசரா போஸ்டரால் குழப்பம்!

Intro:Body:

Ajith Kumar retruns to Chennai

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.