சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிப்ரவரி 1ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார். இந்தநிலையில் மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். திரைப்படங்களை இயக்கிய அவர் தற்போது புதிய பாடல் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி பிரிவதாக கடந்த ஜன.18ஆம் தேதி அறிவித்தனர். தங்கள் 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக இருவரும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Thalapathy 67: மீண்டும் லோகேஷ் கனகராஜூடன் இணையும் தளபதி விஜய்!