சென்னை: சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்து வரும் 'மஹா' படத்தில், நடிகர் ஸ்ரீகாந்த் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார்.
பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது 'மஹா'. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 50ஆவது படமாகும். படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். சுமார் 45 நிமிடங்கள் நடிகர் சிம்பு தோன்றும் காட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் காவல் துறை அதிகாரியாக வரவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'விக்ரம்' என்ற கேரக்டரில் காவல் துறை ஆணையராக அவர் தோன்றவுள்ளாராம். படம் முழுவதும் வரும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் விதமாக, த்ரில் தருணங்கள் கொண்டதாக அமைந்துள்ளதாம்.
ஸ்ரீகாந்த் தொடர்பான காட்சிகள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய மைல் கல்லாக அமையும் எனக் கூறப்படுகிறது.
யூ.ஆர். ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் 'மஹா' படத்தை வரும் மே மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'மஹா' படத்தில் சிம்புவுக்குள் ஒளிந்திருக்கும் சஸ்பென்ஸ்