இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், திரையுலகப் பிரபலங்கள் பலரும் மீண்டும் கரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஆமிர்கானுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது அமீர் கான் நலமுடன் இருக்கிறார். மேலும், தன்னுடன் சமீபத்தில் தொடர்பிலிருந்த அனைவரையும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.