மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் அதிதி ராவ் ஹைதரி. இதன் பின்னர் தமிழில் 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் தோன்றினார்.
இந்தப் படங்களுக்கு முன்னாள் இந்தியில் சில படங்களில் நடித்திருந்த அவர், தெரியாத நபருடன் நெருக்கமான காட்சியில் நடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது குறித்து பிரபல இணைய சேனலுக்கான டாக் ஷோ ஒன்றில் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
இந்தியில் 'ஏ சாலி ஸிந்தகி' என்ற படத்தில் நடிப்பதற்கு முன்னாள் அதன் ஆடிஷனில் கலந்து கொண்டேன். அப்போது தெரியாத நபருடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் நிலை ஏற்பட்டது.
என்னுடன் நடிகர் அருணோதே சிங் நடித்தார். அவர் சில படங்களில் நடித்திருந்தாலும், அவரை எனக்கு முன்பின் தெரியாது. பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்த அவருடன் அப்படி நடிக்கையில், என்னதான் நடக்கிறது என்று புரியாமல் இருந்தேன். இருப்பினும் அவர் மிகவும் அமைதியானவராக இருந்தார்.
மணிரத்னம் இயக்கிய 'பம்பாய்' படம்தான் சினிமாவுக்குள் என்னை வரவழைத்தது. குறிப்பாக அந்தப் படத்தில் வரும் 'கண்ணாளனே' பாடல் மிகவும் ஈர்த்தது என்றார்.
தனது வாழ்வில் நிகழ்ந்த காதல் தருணங்கள் பற்றி கூறிய அவர், ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு முதல் முறையாக காதல் கடிதம் வந்தது. அதை எனது சீனியர்தான் எழுயிருந்தார் என்பது எனக்குத் தெரியும். இரண்டு பக்கங்களுடன் மிகப் பெரிதாக இருந்த அந்தக் கடிதத்தில், 'நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். உன்னைப் போன்று அழகாக யாரும் இல்லை' என வர்ணிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.