ETV Bharat / sitara

ஜெய் சூர்யாவின் 'சுஃபியும் சுஜாதாயும்' வெளியாகும் தேதி அறிவிப்பு

author img

By

Published : Jun 23, 2020, 2:24 PM IST

மலையாளத்தில் ஜெய் சூர்யா - அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் உருவாகியுள்ள சுஃபியும் சுஜாதாயும் (Sufiyum Sujatayum) திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய் சூர்யா
ஜெய் சூர்யா

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால், அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் படங்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கியுள்ளன. இதனால் படக்குழுவினர் சிலர் டிஜிட்டல் தளமான ஓடிடி (OTT) இல் வெளியிட சம்மதம் தெரிவித்து, அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், தமிழில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் கடந்த மே 29ஆம் தேதியும், கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' திரைப்படம் ஜூன் 19ஆம் தேதியும் அமேசான் பிரைமில் வெளியானது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு ஆதரவு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் ஜெய்சூர்யா அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் உருவாகியுள்ள
சுஃபியும் சுஜாதாயும் (Sufiyum Sujatayum) திரைப்படம் வருகிற ஜூலை மூன்றாம் தேதி வெளியாக உள்ளது.

ஜெய் சூர்யா
சுஃபியும் சுஜாதாயும்
இசையை மையப்படுத்திய காதல் கதையாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் மூலமாக சுமார் 14 வருட காலத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் அதிதி ராவ் ஹைதாரி மீண்டும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.