ETV Bharat / sitara

'மீண்டும் கொண்டு வாருங்கள் ஷைலஜா டீச்சரை' ஆதரவு தெரிவிக்கும் நடிகைகள்! - ஷைலஜா டீச்சர்

புதிய அமைச்சரவைப் பட்டியலில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஷைலஜா டீச்சரின் பெயர் இடம்பெறாததையடுத்து நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் கேரள அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.

shailaja
shailaja
author img

By

Published : May 18, 2021, 7:58 PM IST

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியான எல்.டி.எஃப். கூட்டணி 99 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். மே 20ஆம் தேதி முதலமைச்சர் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், புதிய அமைச்சரவைப் பட்டியல் இன்று (மே 18) வெளியானது. இதில் கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே. ஷைலஜா டீச்சரின் பெயர் இடம்பெறாதது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஷைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் இடம் தராத நிலையில், அவரை தலைமைக் கொறடாவாக கட்சி நியமித்துள்ளது. ஷைலாஜாவை சுகாதாரத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்க வேண்டுமென நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.

  • So one of the best health ministers we’ve ever had @shailajateacher got dropped from the cabinet mid-pandemic?! What exactly happened there @vijayanpinarayi ?

    — malavika mohanan (@MalavikaM_) May 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்த வகையில், நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுவரை இருந்ததிலேயே மிகச்சிறந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். பெருந்தொற்று காலத்தில் என்ன நடக்கிறது பினராயி விஜயன்" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

shailaja
பார்வதி ட்வீட்

இவரைப் போன்றே 'பூ', 'மரியான்' பட நடிகை பார்வதி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஷைலஜா டீச்சர் அமைச்சரவையில் இருக்கத் தகுதியானவர். கேரள மக்களுக்கு அவருடைய தலைமை தேவை. மிக இக்கட்டான காலகட்டத்தில் மாநிலத்தை சிறப்பாக வழிநடத்தியவர், ஷைலஜா. மீண்டும் கொண்டு வாருங்கள் ஷைலஜா டீச்சரை" என பதிவிட்டு #beingourteacherback என்னும் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்டாக்கத் தொடங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.