ETV Bharat / sitara

'நான் எப்போதும் உங்களுடன் துணையாக நிற்பேன்'- வனிதாவின் மூத்த மகள் - வனிதா திருமணம்

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து அவரது மூத்த மகள் உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதா
வனிதா
author img

By

Published : Jun 21, 2020, 4:20 AM IST

நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்ற நிலையில், மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களுக்குத் துணையாக இருப்பேன்.

உங்களுடன் நான் இருந்த 15 ஆண்டுகளில் வாழ்க்கையில் பல விஷயங்ளை கற்றுக்கொண்டுள்ளேன். உங்களை எனக்குத் தெரிந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது. நீங்கள் அன்பானவர் உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும். அதில் எந்தத் தவறும் இல்லை.

நீங்கள் ஒரு கடின உழைப்பாளி, நேர்மையானவர், இரக்கமானவர், அன்பானவர். அனைவரையும் போல நீங்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத் தகுதியுள்ளவர். இதை உங்களின் மகளாகவும், தோழியாகவும் சொல்கிறேன். ஆல் தி பெஸ்ட் அம்மா" என்று பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.