சென்னை: உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தனது திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளார் மலையாள நடிகை உத்ரா உன்னி.
இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்று காரணாக உலகம் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எங்களது திருமணத்தை அமைதியான சூழல் திரும்பும் வரை தள்ளிவைத்துள்ளோம். இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்திருந்த அனைவருக்கும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால் தாலி கட்டும் சம்பிரதாயம் திட்டமிட்ட நாளில் கோயிலில் நடைபெறும். மற்ற தகவல்கள் குறித்து உடனுக்குடன் பதிவிடுகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
உலகம் இதிலிருந்து விரைவில் மீண்டு வரட்டும் என்று தன்னை திருமணம் செய்துகொள்ளப்போகும் நிதிஷ் நாயருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தோடு இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் உத்ரா உன்னி, தமிழில் வவ்வால் பசங்க என்ற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த நிதிஷ் நாயர் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைத்துள்ளார்.