இந்தியாவில் தற்போது கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினமும் லட்சக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிப்படைந்தும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர். பல திரைப்பிரபலங்களும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை சுனைனாவிற்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுனைனா கூறியிருப்பதாவது, "அனைவருக்கும் வணக்கம். மிக கவனமாக இருந்தும் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். அத்தனை விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்.
- — SUNAINAA (@TheSunainaa) May 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— SUNAINAA (@TheSunainaa) May 10, 2021
">— SUNAINAA (@TheSunainaa) May 10, 2021
என் குடும்பத்தினரை தவிர யாருடனும் நான் தொடர்பில் இல்லை. அவர்கள் அனைவரும் தனிமையில் உள்ளனர். எனது சமூகவலைதளப் பக்கங்களை மொத்தமாக ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும், தேவை இருப்பவர்களுக்கு சிறய அளவிலோ பெரிய அளவிலோ உதவியாக இருக்கும் செய்திகளை பகிரும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை.
தயவு செய்து முகக் கவசம் அணியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள், நான் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.