ETV Bharat / sitara

'இடையழகி' சிம்ரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..! - birthday

தமிழ் சினிமாவின் 'இடையழகி' என்று அழைக்கப்படும் நடிகை சிம்ரன் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இடையழகி சிம்ரன்
author img

By

Published : Apr 4, 2019, 2:49 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சிம்ரன். இவர் விஜய், பிரசாந்த், அஜித், கமல் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய சிம்ரன் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார்.

simran
இடையழகி சிம்ரன்

1995ஆம் ஆண்டு இவர் முதன்முதலாக சனம் ஹர்ஜாய் என்ற இந்தி படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 1996 இல் வெளியான தேரே மேரே சப்னே படம்தான் முதல் வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானார். நடிப்பு, நடனம் என பன்முக திறமைக் கொண்ட சிம்ரனுக்கு தமிழ் சினிமா இடையழகி என்ற பட்டப்பெயரை கொடுத்தது.

இந்த இடையழகி தமிழ் சினிமாவை மட்டும் ஆளவில்லை இளைஞர்களின் மனதையும் ஆட்கொண்டுள்ளார். வருடத்திற்கு நூறு கதாநாயகிகள் வருவதும் போவதும் உண்டு. அந்த நூறில் ஒருவர்தான் சிம்ரன். சிம்ரனுக்கு நிகர் அவரே. இவரை நடிப்பு புயல் என்றே சில இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர், கதாநாயகர்களுக்கு நிகராக போட்டி போட்டு நடிப்பவர். சிம்ரன் நடித்த பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, அவள் வருவாளா ஆகிய திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டன.

simran
இடையழகி சிம்ரன்

சிம்ரன் தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்தார், அவரது நடத்தை கண்டு மயங்காதவர்கள் எவருமில்லை. வட இந்தியராக வந்தவரை தமிழக ரசிகர்கள் தமிழ் மகளாகவே நினைத்தனர். அப்படிப்பட்ட இந்த இடையழகிக்கு ரசிகர்களின் ஆத்மார்த்தமான பிறந்தநாள் வாழ்த்துகள்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.