மலையாளத் திரைப்பட ரசிகர்கள் மலையாளம் மட்டுமல்லாது பிற மொழி படங்களையும், நடிகர்களையும் அதிகம் விரும்பக்கூடியவர்கள். அந்த வகையில், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருக்கு கேரளாவில் தீவிர ரசிகர் பட்டாளம் உள்ளது.
அதே போன்று தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர் நடித்த பல படங்களும் மலையாளத்தில் டப்பிங் செய்து திரையிடப்படுவதுண்டு.
இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஷகிலா, தெலுங்கு ஊடகம் ஒன்றில் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், மகேஷ்பாபு, ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் பற்றி கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நடிகை ஷகிலா, மகேஷ்பாபு தனது சகோதரரைப் போன்றவர் என்றும் ஜுனியர் என்டிஆர் ஒரு நல்ல டான்ஸர் எனவும் கூறினார். அதே வேளையில் அல்லு அர்ஜுனை தனக்கு தெரியாது என்றும் கூறினார். அவரது இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, ஷகிலாவை ட்ரோல் செய்து எப்படி ஒரு முன்னணி நடிகரைத் தெரியாது என்று நீங்கள் சொல்லலாம் என ரசிகர்கள் பலரும் கேள்வியெழுப்பத் தொடங்கினர்.
-
Rapid Fire with #Shakila#MaheshBabu - MY Brother 👌👌#NTR - Good Dancer👍👍#AlluArjun - Evado naku telidhu 😂😂
— Prashanth R #SoftwareSudheer (@CharanFreak) February 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Kerala lo craze antiri , Mallu boy antiri kadhara 😂😂 thupakk 🤭pic.twitter.com/dsQjw7LPVw
">Rapid Fire with #Shakila#MaheshBabu - MY Brother 👌👌#NTR - Good Dancer👍👍#AlluArjun - Evado naku telidhu 😂😂
— Prashanth R #SoftwareSudheer (@CharanFreak) February 6, 2020
Kerala lo craze antiri , Mallu boy antiri kadhara 😂😂 thupakk 🤭pic.twitter.com/dsQjw7LPVwRapid Fire with #Shakila#MaheshBabu - MY Brother 👌👌#NTR - Good Dancer👍👍#AlluArjun - Evado naku telidhu 😂😂
— Prashanth R #SoftwareSudheer (@CharanFreak) February 6, 2020
Kerala lo craze antiri , Mallu boy antiri kadhara 😂😂 thupakk 🤭pic.twitter.com/dsQjw7LPVw
இதனைத் தொடர்ந்து மகேஷ் பாபு ரசிகர்கள், ஷகிலாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியதோடு, அவர் தவறாக எதுவும் கூறவில்லையே, தனக்கு அவரைப் பற்றித் தெரியாது என்று உண்மையைத்தானே கூறியிருக்கிறார் என வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.