இயக்குநர் ஆர்.கே. செல்வமணியால் 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரோஜா. இதன்பின் செல்வமணி, ரோஜா இருவரும் 13 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது, திரைப்பட இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி, ஆந்திரா நகரி சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகையுமான ரோஜா செல்வமணி தம்பதியினரின் 19ஆவது திருமண நாளை கொண்டாடினார்.
இதனை முன்னிட்டு அவர்களை நேரில் அழைத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். இந்த நிகழ்வின் போது அவர்களின் மகன், மகள் உடன் இருந்தனர்.