சென்னை: குறிப்பட்ட சாதி பெயரைக் கூறி தன்னை விமர்சித்த நபருக்கு நடிகை ரித்விகா ட்விட்டரில் சாட்டையடி பதில் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ரித்விகா தனது ட்விட்டரில், "இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல. இனிமேலும் வருமாயின் அதற்கான பதிலாகவும்" என்று குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தலித்தாக இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால் அந்த பாக்கியத்தைப் பெறவில்லை. நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுக்குள் பிறந்தவள் என்பதால் வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம்.
ஒரு வகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனில் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலம் காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. என்னை தலித்தாக்கிய பிழையும் பாவமும் ஆணினத்தை சாரும். மற்றபடி என அழகை பாராட்டியதற்கு நன்றி. பின்குறிப்பு: தலித் பெண்கள் என்னை விட அழகு, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாகத் திகழும் ரித்விகா, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் பாலாவின் பரதேசி படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வெற்றியாளராகவும் வாகை சூடினார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்றி ரசிகர்களிடமும் லைக்ஸை குவித்து வருகிறார்.
இதையடுத்து சாதி பெயர் சொல்லி விமர்சித்த நபருக்கு தற்போது தக்க பதிலடியை தந்து, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: மெட்ராஸ் நாயகியின் கலக்கல் புகைப்படத்தொகுப்பு