ETV Bharat / sitara

HBD ரம்யா கிருஷ்ணன்... தன்னை தானே செதுக்கிய ராஜமாதா

நடிகை ரம்யா கிருஷ்ணனின் 51ஆவது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றன.

ராஜமாதா
ராஜமாதா
author img

By

Published : Sep 15, 2021, 7:30 AM IST

Updated : Sep 15, 2021, 7:43 AM IST

மிகச் சிறிய வயதிலேயே நடிப்பு துறைக்குள் பலரும் நுழைகின்றனர். ஆனால் அவர்களில் எத்தனை பேர் வெற்றியடைகிறார்கள் என்றால் அது மிகப்பெரிய கேள்விக் கூறியே. அந்தவரிசையில் 14 வயதில் திரைத்துறைக்குள் நுழைந்த ரம்யா கிருஷ்ணன் தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.

சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த ரம்யா கிருஷ்ணன், 'வெள்ளை மனசு' படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற அடுத்ததாக ரஜினிகாந்தின் 'படிக்காதவன்', கமல் ஹாசனுடன் 'பேர் சொல்லும் பிள்ளை' ஆகிய படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார்.

இதனையடுத்து அவர், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான, 'படையப்பா' படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்தார். ஸ்டைலாக திமிர் கலந்த பாணியில் பேசும் நீலாம்பரியை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.

நீலாம்பரி
நீலாம்பரி

கமல் ஹாசன் நடிப்பில் வெளியான இப்படத்தில் மேகி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன.

மேகி
மேகி

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது வெப் சீரிஸ், நிகழ்ச்சியில் நடுவர் என கலக்கி வருகிறார்.

ராஜமாதா
ராஜமாதா

ஒரு கதாபாத்திரம் கொடுத்தால் அதனை மிகவும் கச்சிதமாக நடிப்பதில் இவர் வல்லவர். முதல் படம் தோல்வியைத் தழுவினாலும் சிறிய வேடங்களில் நடித்து ஹீரோயின், வில்லி என படிப்படியாக திரைத்துறைக்குள் முன்னெறி வந்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் இன்று (செப்.15) தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Last Updated : Sep 15, 2021, 7:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.