மலையாள சினிமாவில் தன் நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பார்வதி திருவோத்து. இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் உள்ளனர்.
'டேக் ஆஃப்' என்னும் த்ரில்லர் திரைப்படத்துக்காக சிறப்பு தேசிய விருதினையும் பார்வதி திருவோத்து பெற்றுள்ளார். தன் யதார்த்த நடிப்புக்காக விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள பார்வதி தற்போது இயக்கத்திலும் ஒரு கை பார்த்துவிட இறங்கியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த ஊரடங்கில் இரு கதைகளுக்கான ஸ்கிர்ப்டை தன் வசம் வைத்துள்ளதாகத் பார்வதி தெரிவித்தார். ஒரு கதை சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையில் இருக்கும் என்றும், மற்றொரு கதை அரசியல் பொழுதுபோக்கு வகையிலும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கு முடிந்த பிறகு இந்தத் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... 'பெண் வெறுப்பை பிரதிபலிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் நூலளவு தான் வித்தியாசம்' - பார்வதி Vs அர்ஜுன் ரெட்டி