திரையுலகினர் பலரும் இச்சம்பவத்திற்கு வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் நடிகை நயன்தாராவும் தனது கருத்தை அறிக்கை வாயிலாகப் பதிவு செய்துள்ளார்.
அதில், இந்த என்கவுன்டர் என்பது சரியான நேரத்தில் கிடைத்துள்ள நீதி என்றும் இதற்கு ஈடிணையில்லை என்றும் நயன்தாரா தெரிவித்துள்ளார். மேலும் தனது கருத்துரையில் ஹைதராபாத் காவல் துறையினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்த என்கவுன்டரை நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைக்கலாம் என்ற கருத்தினையும் முன்வைத்துள்ளார்.
![actress nayanthara report on telangana encounter issue](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/ellj2anuyaibgjl_0712newsroom_1575719798_311.jpg)
ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், பெண்களை மதித்து பாதுகாப்பவனே நாயகன் என்றும் தெரிவித்துள்ளார்.
![actress nayanthara report on telangana encounter issue](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/ellj2anvuaecrcq_0712newsroom_1575719443_428.jpg)
இதையும் படிங்க: தெலங்கானா என்கவுன்டருக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து