’பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களால் பரவலாக அறியப்பட்டவர் மீரா மிதுன். இவர் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த மீரா மிதுன், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ஊடக வெளிச்சத்திலேயே இருந்தார். தற்போது சில படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மீரா மிதுன், சிம்ரனை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து மீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ஒரு ரசிகையின் தருணமிது, சிம்ரன் எவ்வளவு க்யூட்டா இருக்காங்க... மற்றவர்களுக்கு வேகமாக வயது கூடிவிடுகிறது. ஆனால் சிம்ரனுக்கு வயதாவதில்லை. 20 ஆண்டுகளாக வெள்ளித்திரையை கட்டியாண்டவர். அவரைத் தவிர வேறு யாரை நான் பார்க்க விரும்புவேன். எனது உத்வேகம், வெள்ளித்திரையின் நிரந்தர அரசி, ஆல்டைம் ஹாட்டி சிம்ரன்' என குறிப்பிட்டுள்ளார்.