தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் லஷ்மி மேனன். 2016ஆம் ஆண்டு இவர் நடித்த மிருதன் திரைப்படம் வெளியான பிறகு இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
தற்போது தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம் லஷ்மி மேனன். அதன்படி முத்தய்யா இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்க உள்ளார். இதற்கு முன்பாக லஷ்மி மேனனும் கௌதம் கார்த்திக்கும் நடித்த சிப்பாய் திரைப்படம் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... நித்யா மேனன் புகைப்படங்கள்