ETV Bharat / sitara

'பயந்துட்டியா குமாரு' - ட்விட்டரில் பிளாக் செய்த வனிதாவுக்கு கஸ்தூரி பதிலடி! - Actress kasthuri

ட்விட்டரில் தன்னை பிளாக் செய்த வனிதாவை கலாய்த்து நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதா
வனிதா
author img

By

Published : Jul 20, 2020, 11:38 PM IST

யூ-டியூப், ட்விட்டர், முகநூல் என்று சமூக வலைதளங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும் வனிதாவின் திருமணம்தான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

சிலபேர் அவரது திருமணத்திற்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் வனிதாவின் திருமணம் குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதைப் பார்த்துக் கடுப்பான நடிகை வனிதா அவரை பிளாக் செய்துள்ளார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகை கஸ்தூரி தனது ஸ்டைலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பயந்துட்டியா குமாரு? யார், யாரை தூண்டி விடுகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். யாராவது திருப்பிக் கொடுத்தால் அவர்களைத் திட்டிவிட்டு ஓடிவிடுவது.

உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதுவும் பேசவில்லை. உங்களின் சீப் பப்ளிக் ஆக்ஷன் பற்றிதான் பேசுகிறேன். உங்கள் நலன் கருதி கேள்வி கேட்கும் நல்லவர்களை பிளாக் செய்துவிட்டு, ஏமாற்றுபவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனைக் கடுமையாகச் சாடி பிரபல யூ-டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.