ETV Bharat / sitara

'பொண்ணு வேணும்னா? உங்க அம்மா, சகோதரி கிட்ட கேளுங்க': அஜித் ரசிகர்களை வம்பிழுத்த கஸ்தூரி! - Kasthuri fight with ajith fans

நடிகை கஸ்தூரி, தல அஜித் ரசிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

பொண்ணு வேணும்னா? உங்க அம்மா, சகோதரி கிட்ட கேளுங்க

author img

By

Published : Jan 20, 2020, 2:36 PM IST

Updated : Jan 20, 2020, 4:17 PM IST

தமிழில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் அரசியல் மற்றும் சமூக விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பதிவு செய்து வருகிறார். அப்பதிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் அவற்றைச் சளைக்காமல் சமாளித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் ஆபாச வார்த்தைகளை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் கஸ்தூரி பெயரும் இடம்பெற்று இருந்ததால் அதைக் கண்டு கடுப்பாகி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், 'மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. அஜித் ரசிகன்னு பீத்தி, அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க. ' என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

'பொண்ணு வேணும்னா? உங்க அம்மா, சகோதரி கிட்ட கேளுங்க'

இதைக் கண்ட அஜித் ரசிகர்களோ, இது போன்ற ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி நாங்கள் யாரும் ட்வீட் செய்யவில்லை. இது அஜித்தையும், அவரது ரசிகர்களையும் இழிவுபடுத்த யாரோ செய்த சதி என்று கூறியுள்ளனர்.

மேலும் #DirtyKasthuriAunty என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டானதைப் பார்த்த கஸ்தூரி, 'தல ரசிகர்களை பார்த்துப் பெருமைப்படுகிறேன். இது தான் அவர்களின் ஒரே வேலையா? கேவலமாக பேசுவது, சம்பந்தப்பட்டவர்களை தடுத்து நிறுத்தாமல் ஒன்று சேர்த்துக் கொண்டு வசைபாடுவதா என்று கேட்டு #தமிழகத்தின்_தலயெழுத்து #தலவலி' என்று ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று அஜித் ரசிகர்களை, கஸ்தூரி ட்விட்டரில் சீண்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Intro:Body:

actress kasthuri

Conclusion:
Last Updated : Jan 20, 2020, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.