ETV Bharat / sitara

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் - விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகநாத் இயக்கும் புதிய படம்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகநாத் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பையில் இன்று தொடங்கியது.

vijay-deverakonda
vijay-deverakonda
author img

By

Published : Jan 20, 2020, 12:51 PM IST

'டியர் காம்ரேட்' திரைப்படத்தைத் தொடர்ந்து 'அர்ஜுன் ரெட்டி' புகழ் விஜய் தேவரகொண்டா தற்போது பிரபல இயக்குநர் பூரி ஜெகநாத் உடன் இணைந்துள்ளார்.

#VD10 என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்தப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் உருவாகிவருகிறது.

இந்தப்படத்தில் நடிகை சார்மி, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பூரி ஜெகநாத், சார்மி, கரண் ஜோகர், அபூர்வா மேத்தா ஆகியோர் #VD10 படத்தை தயாரிக்கின்றனர்.

இதற்காக தாய்லாந்து சென்ற நடிகர் விஜய் தேவரகொண்டா சில கலைகளையும், சண்டைப் பயிற்சிகளையும் முடித்து நாடு திரும்பியுள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகள் இன்று மும்பையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

முன்னதாக இந்தப்படத்தில் நடிக்க கேஜிஎஃப் புகழ் யாஷிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில், இறுதியாக விஜய் தேவரகொண்டா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப்படம் மூலம் அவர் இந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

  • IT'S OFFICIAL... Karan Johar and Puri Jagannadh join hands... Their first collaboration - starring #VijayDeverakonda - starts filming in #Mumbai today... Will release in #Hindi and all South Indian languages... Produced by Puri Jagannadh, Charmme Kaur, Karan Johar, Apoorva Mehta. pic.twitter.com/ktcfugABG1

    — taran adarsh (@taran_adarsh) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'வேல்டு ஃபேமஸ் லவ்வர்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், ஏ.எல்.விஜய் இயக்கும் 'தலைவி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார்.

இதையும் படிங்க...

'வாட் ஏ மேன்'- மாநாடுக்குத் தயாராகும் சிம்பு

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.