ETV Bharat / sitara

காஜல் அகர்வாலின் 'கோஸ்டி' படப்பிடிப்பு நிறைவு! - கோஸ்டி திரைப்படம்

காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள 'கோஸ்டி' படத்தின் எஞ்சியிருந்த சில காட்சிகளின் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது.

Ghosty
Ghosty
author img

By

Published : Jul 9, 2021, 2:25 PM IST

சென்னை: 'குலேபகாவலி' படத்தைத் தொடர்ந்து கல்யாண் இயக்கும் புதிய படம் 'கோஸ்டி'. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன் கே.எஸ். ரவிக்குமார், சுப்பு பஞ்சு அருணாசலம், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சத்யன், ஊர்வசி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், லிவிங்ஸ்டன், மதன்பாபு, சந்தான பாரதி, நரேன், தங்கதுரை உள்ளிட்டப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை தமன்னா வெளியிட்டிருந்தார்.

கோஸ்டி படத்தின் அனைத்துக் காட்சிகளும் பொது முடக்கத்திற்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் ஒரு சில காட்சிகளும், புரோமா பாடல்களும் மட்டும் பொது முடக்கம் காரணமாக எடுக்க முடியாமல் போனது.

தற்போது படப்பிடிப்பிற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதையடுத்து கோஸ்டி படக்குழுவினர் எஞ்சியிருந்த காட்சிகளை எடுத்து முடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகளில் கோஸ்டி படக்குழுவினர் ஈடுபடவுள்ளனர். முழுப்படப்பிடிப்பையும் முடித்ததில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

இதுகுறித்து கோஸ்டி படத்தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெயராம் கூறுகையில், 'உண்மையில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் படமான 'கோஸ்டி' படப்பிடிப்பு முடிந்ததால் மட்டுமல்ல, மொத்த திரைத்துறையும் மீண்டும் பணிகளை ஆரம்பித்திருப்பது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.

Ghosty
'கோஸ்டி' படப்பிடிப்பு நிறைவு

இந்தக் கடினமான சூழ்நிலையில் திரைத்துறையினர் பாதிக்கப்படக்கூடாது, என்பதைப் புரிந்துகொண்டு, எங்கள் பணிகளுக்கு அனுமதியளித்த, தமிழ்நாடு அரசுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறோம்.

கோஸ்டி படத்தின் படப்பிடிப்பை சரியான நேரத்திற்கு முடிக்க ஒத்துழைப்பை நல்கிய காஜல் அகர்வாலுக்கு நன்றி. இயக்குநர் கல்யாண் அசாதாரண திறமை கொண்டவர்.

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பல சிக்கல்களை அவர் சுமுகமாக கையாண்டார். அதுமட்டுமல்லாது படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் கச்சிதமாக முடித்து, சாதித்துக் காட்டியுள்ளார்.

கடும் உழைப்பினை தந்த படக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது.

விரைவில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, இசை, ட்ரெய்லர் வெளியீடு, பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றனர்.

இதையும் படிங்க: காஜல் அகர்வாலின் ஹாரர் காமெடி 'கோஸ்டி' !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.