ETV Bharat / sitara

அரசியலுக்கு டாட்டா? - சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் பொல்லாதவன் ‘நடிகை’! - பொல்லாதவன் பட நடிகை

நடிகை திவ்யா ஸ்பந்தனா முழுநேர அரசியலை விட்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக கன்னட திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Actress Divya Spandana
author img

By

Published : Oct 30, 2019, 9:25 AM IST

சிம்பு நடிப்பில் 2004இல் வெளியான குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. தொடர்ந்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அபி என்ற கன்னட திரைப்படம் மூலம் திரையுலக பயணத்தை தொடங்கிய இவர், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதோடு, கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்த ஸ்பந்தனா, 2011க்குப் பிறகு ஒரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

Actress Divya Spandana
திவ்யா ஸ்பந்தனா

இதனிடையே, திவ்யா தற்போது முழுநேர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதாக கன்னட திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக அரசியலில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும், வெள்ளித்திரையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் 'தில் கா ராஜா' என்ற கன்னட திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. கன்னட நடிகர் பிரஜ்வால் தேவராஜ் நடித்திருக்கும் இந்த படத்தை சேமநாத் பட்டில் இயக்கியுள்ளார்.

Actress Divya Spandana
திவ்யா ஸ்பந்தனா

இதையும் படிங்க...

'இந்தியன்-2' படத்திற்காக மீண்டும் கமலுடன் இணையும் ஆடை வடிவமைப்பாளர்!

Intro:Body:

divya spanthana

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.