ETV Bharat / sitara

’வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புகிறேன்’ - விஷால் நம்பிக்கை! - latest chennai news

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என தான் நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

actor-vishal-says-i-hope-dmk-will-fulfill-its-promises
வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புகிறேன் - விஷால்
author img

By

Published : Aug 29, 2021, 6:55 PM IST

சென்னை: நடிகர் விஷால் இன்று (ஆக.29) தனது பிறந்தநாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்தாள் கொண்டாட தான் இங்குவந்துள்ளதாகவும், பிறந்தநாளன்று நிறைய நல்ல விஷயங்கள் நடப்பதால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

வைகைப் புயலுக்கு வாழ்த்து

தொடர்ந்து, தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஷால், ஒரு ரசிகனாக நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க வருவதை வரவேற்பதாகவும், அவர் நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

’ஸ்டாலினை நம்புகிறேன்’

மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயதநிதியால், சினிமா துறைக்கு நல்லது நடக்கும் என தான் நம்புவதாகவும், நடிகர் சங்க வழக்கு நிலுவையில் இருப்பதால், கரோனா காலத்தில் உயிரிழந்த கலைஞர்களின் குடும்பத்தினருக்கு உதவ முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”ஸ்டாலின் நல்லாட்சி தருவார் என்பதால் தான் மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்” எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஆதரவற்றோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.