நடிகர் விஷால் நடிப்பில் 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து
வினோத் குமார் இயக்கிவரும் 'லத்தி' படத்தில் நடித்துவருகிறார், விஷால். இதில் விஷாலுடன் இணைந்து சுனைனா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்கானப் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது விஷாலுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக விஷால் கேரளா சென்றார். அங்கு சில வாரங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷால் இன்று சென்னை திரும்பினார். இதனைத்தொடர்ந்து நாளை மீண்டும் 'லத்தி' படப்பிடிப்பில் விஷால் கலந்துகொள்ள உள்ளார்.
இதையும் படிங்க:‘என்னை வைத்து காதல் படம் எடுக்க தைரியம் வேண்டும்’ - நடிகர் பிரபாஸ்