நடிகர் விஷால் ஆர்யாவுடன் இணைந்து 'எனிமி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இதனைடுத்து விஷால் புதுமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்காலிகமாக '#விஷால் 31' என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
அப்போது நடிகர் பாபு ராஜ், விஷால் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அதில் எதிர்பாராத விதமாக விஷாலின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'எனிமி' படப்பிடிப்பு நிறைவு: டீஸர் அப்டேட்டை வெளியிட்ட விஷால்