ETV Bharat / sitara

தந்தையும் மகனும் இணையும் 'சீயான் 60' - Actor Vikram joining hands with his son Dhruv for his 60th film

நடிகர் விக்ரம் தனது 60ஆவது படத்தில், அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீயான் 60
சீயான் 60
author img

By

Published : Jun 8, 2020, 11:43 PM IST

நடிகர் விக்ரம் தற்போது 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கரோனா ஊரடங்கு முடிவடைந்ததும் தொடங்கவுள்ளன.

இதனிடையே நடிகர் விக்ரமின் அடுத்த படமான 60ஆவது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவிவந்த நிலையில், தனது 60ஆவது படத்தில் தன் மகன் துருவ் விக்ரமுடன் அவர் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம், துருவ்
விக்ரம், துருவ்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள படக்குழுவினர், ”பீட்சா தொடங்கி தற்போது முடிவடைந்துள்ள 'ஜகமே தந்திரம்' வரை கார்த்திக் சுப்புராஜின் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைகளங்கள் உடையவை. அந்த வகையில் 'சீயான் 60' படமும் வித்தியாசமான கதைக்களமாகவும் ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமையும்” என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியோடு, தமிழ்த் திரையுலகில் தன் பாடலால் இளைஞர்களை உற்சாகமாக்கி வரும் அனிருத்தும் இக்கூட்டணியில் இணைந்திருப்பது, ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீயான் 60
சீயான் 60

இப்படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இவருடைய வெளியீட்டில்தான் நடிகர் விஜயின் 'மாஸ்டர்' திரைப்படம் தயாராகி வருகிறது. மாஸ்டர் வெளியீட்டைத் தொடர்ந்து 'கோப்ரா', 'துக்ளக் தர்பார்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'சீயான் 60' படத்தையும் இவர் தயாரிக்கவுள்ளார்.

இப்படம் 2021ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லைட், ஆக்‌ஷன் எப்போ சொல்லுவீங்க! காத்திருக்கும் ஹீரோயின்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.