'கைதி' திரைப்பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
முன்னதாக வெளியான இத்திரைப்படத்தின் "குட்டி ஸ்டோரி", "வாத்தி கம்மிங்" உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீடு கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படத்தின் டீசர் இன்று (நவ. 14) வெளியிடப்பட்டுள்ளது.
-
#MasterTeaser https://t.co/dqLTOI2C2I
— Vijay (@actorvijay) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#MasterTeaser https://t.co/dqLTOI2C2I
— Vijay (@actorvijay) November 14, 2020#MasterTeaser https://t.co/dqLTOI2C2I
— Vijay (@actorvijay) November 14, 2020
எப்பொழுதும் போல, டீசரிலும் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜயின் காட்சியை #masterteaser என்ற ஹேஸ்டாக்கினைக் கொண்டு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
கல்லூரிப் போராசிரியராக இதில் விஜய் நடித்துள்ளார் என முன்பே தகவல் வெளியான நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக படத்தின் டீசர் அமைந்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த டீசர், விஜயையும்- விஜய் சேதுபதியையும் ஒன்றாக திரையில் காண வேண்டும் என்ற ஆவலை மேலும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: