கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிஎம்டபுல்யூ எக்ஸ் 5 சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதித்ததற்காக 400 சதவீதம் அளவுக்கு வணிகவரித் துறை அபராதம் விதித்திருந்தது. இதனை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
அதில், “ஏற்கனவே நுழைவு வரி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததன் காரணமாகவே நுழைவு வரி செலுத்த தாமதம் ஏற்பட்டது.
அத்துடன் நுழைவு வரி செலுத்திய நிலையில் அதிக அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால் அபராதம் விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (ஜன.28) நீதிபதி சி.சரவணன் முன்பு நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
மேலும் இதேபோல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், அடையார் கேட் ஹோட்டல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கோடு இந்த வழக்கை சேர்ப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை வணிக வரித்துறை உறுதி செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தனுஷின் 'பொல்லாத உலகம்' பாடல் யூ டியூபில் சாதனை!