கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
"சமீபத்தில் நடைபெற்ற பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்களுக்கு அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
எல்லோரும் பேசும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிதான் விஜய்யும் பேசினார். நீதிமன்றமே சுபஸ்ரீ-ன் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி கேட்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் இவ்வாறு எதிர்ப்பு வருவதற்கான காரணம் என்ன என தெரியவில்லை"
மேலும், நடிகர் விஜய்யின் மேடைப்பேச்சு அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியா என செய்தியாளர் கேட்டதற்கு விஜய் அரசியல் வருவதாக தனக்கு தெரியவில்லை என பதில் கூறினார்.
இதையும் பார்க்க : இது யாரு நம்ம சிம்புவா? கேஜிஎப் ஹூரோவா? - ஆளே மாறிட்டேள் சிம்பு!