ETV Bharat / sitara

சூரரைப் போற்று - 100ஆவது நாள் கொண்டாட்டம்!

author img

By

Published : Feb 19, 2021, 4:40 PM IST

சென்னை: சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா கொண்டாடப்படுகிறது.

surya
surya

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, ‎அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. திரைப்படம் வெளியானதிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இந்த படத்தில் பரேஷ் ராவல், மோகன் பாபு, கருணாஸ், ஊர்வசி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஓடிடி தளத்தில் தமிழில் வெளியான பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாகும். சூரரைப் போற்று திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ரூ. 100 கோடிக்கும் மேல் ப்ரீ பிசினஸ் செய்து 100 க்ரோர் கிளப்பில் இணைந்தது. அதுமட்டுமல்லாது இந்தாண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பொதுபிரிவில் தேர்வானது. சமீபத்தில் ஓடிடி தளத்தில் 50 மில்லியன் பேர் பார்த்த படம் என்ற சாதனையை 'சூரரைப் போற்று' பெற்றது.

இந்நிலையில் இப்படம் ஓடிடியில் ரிலீசாகி இன்றுடன் (பிப்ரவரி 19) நூறு நாட்கள் கடந்துள்ளது. இதனை சமூக வலைதளவாசிகள் ட்விட்டரில் #100DaysOfSooraraiPottru என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர். 'சூரரைப் போற்று' படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவளாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளது. மேலும் இதனை கொண்டாடும் விதமாக இன்று (பிப்ரவரி 19) மாலை சூரரைப் போற்று படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: ஆஸ்கருக்குத் தேர்வான 'சூரரைப் போற்று'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.