நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்திய நீதித்துறை தான் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்கிறது.
நீதித்துறையின் பெருந்தன்மையை ஏற்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்று கூறியிருந்தார்.
இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. இந்த கருத்துக்கு எதிராக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முகாந்திரம் இருப்பதாகக் கூறி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
- — Suriya Sivakumar (@Suriya_offl) September 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Suriya Sivakumar (@Suriya_offl) September 18, 2020
">— Suriya Sivakumar (@Suriya_offl) September 18, 2020
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையற்றது என்று கூறி ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆறு பேர் கடிதம் எழுதியிருந்தனர்.
இதுகுறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு, நீதிபதி சுப்ரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்து, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், விமர்சனங்களை முன்வைக்கும் போது இனி கவனமுடன் இருக்குமாறு சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
இதையும் படிங்க:'உயிருக்கு பயந்து காணொலி மூலம் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களை தேர்வு எழுத சொல்கிறது' - சூர்யா காட்டம்