ETV Bharat / sitara

பெற்றோருக்கு வாழ்நாள் தண்டனை கொடுக்காதீர்கள் - சூர்யா உருக்கம் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், நடிகர் சூர்யா விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யா
சூர்யா
author img

By

Published : Sep 18, 2021, 2:05 PM IST

நீட் தேர்வு அச்சம் காரணமாகக் கடந்த 12ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு தற்கொலைகள் தொடர்பாக நடிகர் சூர்யா விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

மாணவ, மாணவிகள் தங்களது வாழ்வில் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஒரு அண்ணனாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்குப் போன வாரம் அல்லது போன மாதம் இருந்த ஏதோ ஒரு கவலை இப்போது இருக்கிறதா என யோசித்துப் பாருங்கள். நிச்சயம் குறைந்திருக்கும் இல்லாமல்கூட போயிருக்கும். ஒரு தேர்வு உங்கள் உயிரைவிடப் பெரிதல்ல.

உங்களுக்குப் பிடித்தவர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். தற்கொலை முடிவு உங்களை மிகவும் விரும்பும் அப்பா, அம்மா போன்றோருக்கு நீங்கள் தரும் வாழ்நாள் தண்டனை என்பதை மறந்துவிடாதீர்கள்.

நானும் நிறைய தேர்வுகளில் மோசமான மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்தவன்தான். மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்வில் துணிவாக இருந்தால் நிறையச் சாதிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உயிரைவிட பெரியதல்ல தேர்வு - நடிகர் சூர்யா உருக்கமான அறிவுரை

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.