ETV Bharat / sitara

எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி - 'ஜெய் பீம்' சூர்யா - ஜெய் பீம் படம் தொடர்பான பிரச்னை

'ஜெய் பீம்' பட விவகாரத்தில், எங்களுடன் நின்றதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Jai bhim
Jai bhim
author img

By

Published : Nov 17, 2021, 5:06 PM IST

Updated : Nov 17, 2021, 5:55 PM IST

ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா (Suriya) நடித்துள்ள படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). இதில் ரஜிஷா விஜயன் (Rajisha Vijayan), லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது.

பலதரப்பினர் பாராட்டு

இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் (CM Stalin), கமல் ஹாசன், இயக்குநர் பா. இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்டப் பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

அதிகாரத்தை எதிர்த்துச் சட்டப் போராட்டம் மூலம் எவ்வாறு நீதி நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்னை குறித்தும் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சூர்யா

இருப்பினும் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும்விதமாக சில காட்சிகளும், பெயரும் உள்ளதாகக் கூறி, அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை சூர்யாவிற்கு எழுதியிருந்தார்.

இதையடுத்து சூர்யாவிற்கு வன்னியர் சமூகத்தைச் சார்ந்த பல நிர்வாகிகள் நெருக்கடியையும் எச்சரிக்கையையும் விடுத்த வண்ணம் உள்ளனர்.

திரைப் பிரபலங்களான பா. இரஞ்சித், அமீர், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து '#WeStandWithSuriya' என்னும் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சூர்யா நன்றி

கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் 'ஜெய் பீம்' தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், 'ஜெய் பீம்' படக்குழுவினருடன் நின்ற ரசிகர்களுக்கு சூர்யா தற்போது நன்றி தெரிவித்துள்ளார்.

  • Dear all, this love for #Jaibhim is overwhelming. I’ve never witnessed this before! Can’t express in words how thankful I am for the trust & reassurance you all have given us. Heartfelt thanks for standing by us ✊🏼

    — Suriya Sivakumar (@Suriya_offl) November 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து சூர்யா தனது ட்விட்டரில், "அன்பர்களே, 'ஜெய்பீம்' மீது நீங்கள் வைத்திருக்கும் இந்த அன்பு அலாதியானது.

இதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை, உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை சொற்களால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Jai Bhim: சூர்யாவுக்கு அச்சுறுத்தல் - வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்!

Last Updated : Nov 17, 2021, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.